
சென்னை : கிரீன் சேனல் நிறுவனம் சார்பில் வி.சகாதேவன், சுப்ராயன் தயாரிக்கும் படம் 'நண்பர்கள் கவனத்திற்கு'. சஞ்சய், வர்ஷன், மனிஷா ஜித், டாக்டர் சூரி நடிக்கிறார்கள். கே.ஜெயகுமார் இயக்குகிறார். பிரம்மா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன் வெளியிட, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பெற்றார். விழாவில் இயக்குனர்கள் சந்தானபாரதி, பாலசேகரன், பேரரசு, வி.பிரபாகர், பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் கே.ஜெயகுமார் கூறியதாவது:
நண்பர்களுக்குள் படிப்பு எத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது என்பதுதான் கதை. இரண்டு ஹீரோக்களில் ஒருவர் படித்தவர், இன்னொருவர் படிக்காதவர். இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். அந்த பெண் யாரை தேர்வு செய்கிறார்? ஏன்? என்பதுதான் கதை. இன்றைய இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம்.
Post a Comment