ஆர்யாவுடன் லிப் டு லிப் : அஞ்சலி மறுப்பு

|

Anjali refused to lip to lip kiss with Arya ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க அஞ்சலி மறுத்தார். நடித்தே ஆக வேண்டும் என்று இயக்குனர் பிடிவாதமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' படங்களை இயக்கியவர் கண்ணன். அடுத்து 'சேட்டை' என்ற படத்தை இயக்குகிறார். இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'டெல்லி பெல்லி' என்ற படமே தமிழில் 'சேட்டை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. ஒரு காட்சியில் அஞ்சலிக்கு உதட்டோடு உதடு வைத்து ஆர்யா முத்தமிடும் காட்சியை படமாக்க இயக்குனர் தயாரானார். அஞ்சலியிடம் கூறியபோது நடிக்க மறுத்ததுடன் அறையில் போய் அமர்ந்துவிட்டார். இதனால் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அஞ்சலியிடம் சென்று இயக்குனர் காட்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். ஏற்கனவே இந்தி படத்தில் இக்காட்சி முக்கிய அம்சமாக இருந்ததையும் விளக்கினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆர்யா, அஞ்சலியிடம் காட்சியில் நடிக்க வேண்டிய அவசியம் பற்றி கூறினார். அரை மணிநேர போராட்டத்துக்கு பிறகு அஞ்சலி முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தார். இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது,'முத்தக்காட்சி வலுக்கட்டாயமாக திணிக்கப்படவில்லை. முக்கிய தேவை என்பதால் அஞ்சலியிடம் நடிக்கச் சொன்னேன். நடிக்க மறுத்தார். ஆர்யாவும் அஞ்சலியிடம் எடுத்துக் கூறியபிறகு சம்மதித்தார். 6 டேக் எடுக்கப்பட்டது. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்தார். தமன் இசை அமைக்கிறார். யுடிவி தயாரிக்கிறது' என்றார்.
 

+ comments + 1 comments

9 November 2012 at 12:46

சும்மா சொல்லக்கூடாது

http://oorpakkam.com/thiraiseithi/1603-thuppaki-thirai-munnoddam

Post a Comment