சென்னை: அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியின் எதிரியாக வருகிறாராம் நம்ம காமெடி சந்தானம்.
சுராஜ் இயக்கத்தில் கார்த்தி-அனுஷ்கா ஜோடி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தில் காமெடி நடிகரான சந்தானமும் உள்ளார். சந்தானம் இருக்கிறார் என்றால் ஏதாவது காமெடி பீஸாக வந்து கலாய்ப்பார் என்று தானே எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அவர் இந்த படத்தில் புது ரோலில் வருகிறார்.
இது குறித்து சூரஜ் கூறுகையில்,
பிற படங்களுடன் ஒப்பிடுகையில் அலெக்ஸ் பாண்டியனில் சந்தானம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். சீரியஸான காட்சிகளுக்கு இடையே காமெடி சீன்கள் அருமையாக வந்துள்ளது என்றார்.
படத்தில் கார்த்தியின் எதிரியாக வருகிறாராம் சந்தானம். சந்தானம் எதிரியா நடித்தால் எப்பூடி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் அதுவும் காமெடியாகத் தான் இருக்கிறது.
அலெக்ஸ் பாண்டியன் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment