திருமணமாயிட்டா நடிகைகள் நடிக்கக் கூடாதா? - சினேகாவின் ஆதங்கம்

|

Kollywood Not Encouraging Married Actresses

சென்னை: திருமணமாயிட்டா நடிகைகள் நடிக்கக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அதைப் போக்கும் வகையில் என்னை ஹரிதாஸ் படத்தில் இயக்குநர் குமாரவேலன் நடிக்க வைத்தார் என்றார் நடிகை சினேகா.

சினேகா, கிஷோர் இணைந்து நடித்துள்ள படம் ‘ஹரிதாஸ்'. ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகை சினேகா கூறுகையில், "என் கேரியர்ல ரொம்ப திருப்தியான கேரக்டர் இது. இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் என்னை அணுகி கதை சொன்னப்போ, எனக்கு திருமணம் முடிவாகி இருந்தது.

திருமணத்துக்கு பிறகு நடிகைகளை வேறு மாதிரி பார்ப்பார்கள். திருமணத்துக்கு பின் கதாநாயகிகள் நடிக்கக்கூடாது என்ற நிலைமை இன்னும் உள்ளது. நான் எனது திருமணம் பற்றி இயக்குனரிடம் சொன்ன பிறகு, 'பரவாயில்லை. நீங்கள்தான் நடிக்க வேண்டும்,' என்றார்.

அவரது நம்பிக்கைக்கு தலை வணங்கி நடித்துள்ளேன். மிக மரியாதைக்குரிய à®'ரு டீமோட வேலை செய்த அனுபவம் திருப்தியாகவும் நிறைவாகவும் இருந்தது," என்றார்.

 

Post a Comment