இதுபற்றி ரிஷி கூறும்போது, 'சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சில இளைஞர்கள் சேர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்தனர். அதில் நடிகை நயன கிருஷ்ணாவும் ஒருவர். நாங்கள் எல்லோரும் இப்படத்தை உருவாக்க பங்களித்தோம். நயனா 8 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் படத்தின் உரிமை என் பெயரில்தான் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பிருந்து தன்னுடைய பணத்தை தரும்படி அவர் கேட்க ஆரம்பித்தார். இல்லையென்றால் மும்பை, கர்நாடகா, மங்களூர், பெல்லாரி மற்றும் குல்பர்கா ஆகிய ஏரியாக்களின் வினியோக உரிமையை தரும்படி கேட்டார்.
அவர் கேட்ட வினியோக உரிமையின் மதிப்பு ரூ.1 கோடி. அதை தரமறுத்தேன். மேலும் 8 லட்சம் பணத்தை படம் ரிலீஸ் ஆனவுடன் திருப்பி தருவதாக கூறினேன். ஆனால் அவர் கெட்ட வார்த்தைகளால் திட்டினார். அதற்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை என்றார். பத்திரிகை யாளர் சந்திப்பின்போது இந்த பிரச்னை மீண்டும் எழுந்தது. அப்போது ஏற்பட்ட மோதலின்போது ரிஷியை நயன கிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் செருப்பால் அடித்தனர். கைது செய்யப்பட்ட நயன கிருஷ்ணா, பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment