
சென்னை: புதுமுக நடிகர் அக்ஷய் எழுதி இயக்கி நடிக்கும் படம் 'உனக்கு 20 எனக்கு 40'. ஷாலினி, அம்ருதா ஹீரோயின். இப்படம் பற்றி அக்ஷய் கூறியதாவது: ஷாலினி, அம்ருதா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் தோழிகள். ஷாலினியின் வீட்டுக்கு அம்ருதா வருகிறார். அப்போது ஷாலினியின் தந்தை மீது காதல் கொள்கிறார். இருவரும் காதலிக்க தொடங்கியதும் பல்வேறு பிரச்னைகள் எழுகிறது. இதன் முடிவு என்ன என்பது கதை. இதில் சிங்கம்புலி, வையாபுரி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.செல்வம் ஒளிப்பதிவு. ஜோய் மேக்ஸ்வெல் இசை. இதன் ஷூட்டிங் பொள்ளாச்சி, கொடைக்கானல், கோவா, சென்னை மற்றும் கேரளாவில் நடந்துள்ளது.
Post a Comment