விஸ்வரூபம் ஆடியோ... கமல் பாடிய மூன்று பாடல்கள்!

|

Vishwaroopam Tracklist   

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தின் பாடல்கள் சிடி வெளியாகும் முன்பே, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களில் மூன்றை கமல் பாடியுள்ளார்.

சோனி நிறுவனம் இந்த பாடல் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல், படத்துக்கான தீம் பாடல். சூரஸ் கான் இதைப் பாடியுள்ளார்.

இந்தப் பாடலைத் தொடர்ந்து, துப்பாக்கி எங்கள் தொழில் எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை கமலும் பென்னி தயாளும் பாடியுள்ளனர்.

உன்னைக் காணாது நான் என்ற பாடலை கமலும் சங்கர் மகாதேவனும் பாடியுள்ளனர், அணு விதைத்த பூமியிலே என்ற பாடலை கமலுடன் நிகில் டிசோசா பாடியுள்ளார். விஸ்வரூபம் என்ற பாடலை ஷானே மென்டோன்ஸா ரீமிக்ஸ் செய்துள்ளார்.

இவற்றில் மூன்று பாடல்களை கவிஞர் வைரமுத்துவும், இரண்டு பாடல்களை கமல் ஹாஸனும் எழுதியுள்ளனர்.

 

Post a Comment