முதல் முறையாக சொந்தக் குரலில் பின்னணி பேசும் நயன்தாரா!

|

Nayan Dub Her Own   

ஹைதராபாத்: ஒரு தெலுங்குப் படத்துக்காக முதல் முறையாக சொந்தக் குரலில் பேசுகிறார் நடிகை நயன்தாரா.

காதலில் பல கை மாறினாலும் நயனின் மார்க்கெட் தமிழிலும் தெலுங்கிலும் உச்சத்தில் உள்ளது.

தெலுங்கில் இப்போது கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு என்ற படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த மெகா பட்ஜெட் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா. தனது கேரக்டருக்கு விருதுகள் கிடைக்கும் என நயன் எதிர்ப்பார்ப்பதாலேயே இந்த முடிவாம். இதனால் தெலுங்கில் பேசுவதற்கு ஆசிரியர்கள் வைத்து விசேஷ பயிற்சி எடுத்தார்.

இந்தி மற்றும் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர்.

ஏற்கெனவே ஸ்ரீராமராஜ்யம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசின் விருது பெற்றவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment