நடனம் மூலம் மைக்கேல் ஜாக்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் பிரபுதேவா!

|

Prabhudheva Pay Tribute Michael Jackson

மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய நடனப்புயல் பிரபுதேவா இந்திப்படம் ஒன்றில் நடனமாடியுள்ளார்.

இந்தி நடன அமைப்பாளரும் இயக்குநருமான ரெமோ டிசோசாவும், நம் ஊர் பிரபுதேவாவும் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்கள். இதனை நிருபிக்கும் விதமாக இவர்கள் இருவரும் இணைந்துள்ள எனிபடி கேன் டான்ஸ்( ஏபிசிடி) என்ற இந்திப்படத்தில் அவரைப் போலவே நடனமாடியுள்ளனராம். இதில் பிரபுதேவா உடன் நடிகை மாதுரி தீட்சித், டான்ஸ் இந்தியா டான்ஸ் ஷோவில் வெற்றி பெற்ற சல்மான்கான், தர்மேஷ், பிரின்ஸ், மயூரேஷ், விருஷாலி ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் தாராவி பகுதிகளில் இந்த பாடல் காட்சியை படமாக்கப் பட உள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள டிசோசா, பிரபு தேவாவின் நடனவாழ்க்கையில் இது மறக்க முடியாத அனுபவம் என்றார். மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். நாங்கள் நடனத்தின் மூலம் எங்களுடைய திரைப்படத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்றார்.

3டியில் தயாராகும் எனிபடி கேன் டான்ஸ் திரைப்படத்தை யுடிவி நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment