தனது புதிய படத்துக்கு தல என தலைப்பு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அஜீத்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்தப் படத்துக்கு ரசிகர்களே 'தல' என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர்.
இந்தத் தலைப்பே நன்றாக இருப்பதால், அதையே வைத்துக் கொள்ளலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொல்ல, டைட்டில் பிடிபடாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த இயக்குனருக்கும் அந்த யோசனை ஓகேவாகிவிட்டது.
ஆனால் அஜீத் அதனை ஏற்கவில்லையாம்.
"தல என்றால் என்னை மட்டுமே குறிப்பது போலாகிவிடும். கதைக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள்," என்று கூறிவிட்டாராம்.
எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய முயன்றும் அஜீத் பிடிவாதமாக இருந்ததால், இப்போது வேறு பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
Post a Comment