திருவனந்தபுரம்: ஸ்வேதா மேனன் பிரசவ காட்சி நேரடியாக படமாக்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தக் காட்சி இடம்பெறும் படத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
பிளெஸ்ஸி இயக்கும் களிமண்ணு என்ற மலையாளப் படத்துக்காக ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சியை மும்பை மருத்துவமனையில் வைத்து நேரடியாக படமாக்கினர்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து கேரளாவில் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பிரசவ காட்சியை இணைத்தால் படத்தை புறக்கணிப்போம் என்று மலையாள தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
கேரள சபாநாயகர் கார்த்திகேயனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ஸ்வேதா மேனன் தனது பிரசவத்தை கேமராவில் பதிவு செய்ய அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. வியாபாரத்துக்காக இப்படி நடந்துள்னர். பண்பாட்டுக்கு விரோதமாக இந்த செயலை அனுமதிக்க கூடாது,' என்று கூறியுள்ளார்.
பாஜக போராட்டம்
இதற்கிடையில் பாரதீய ஜனதா மகளிர் அணியும் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைவி ஷோபா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டஸ்வேதா மேனன் படத்தில் பணத்துக்காக தாய்மையை இழிவுபடுத்தி உள்ளனர். இது ஒரு அவமானச் செயல் ஆகும். இந்த படத்தை தடை செய்யும்படி அரசிடம் வற்புறுத்தியுள்ளோம், என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே இந்த செயலுக்கு எதிராக இரு பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.
Post a Comment