விஜய் - காஜல் நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு.
ரசிகர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பார்ப்பை வசூலாக்கும் விதத்தில், படத்தை நான்கு தினங்களுக்கு முன்பே இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பல வகையிலும் ஹாலிவுட் படங்களின் பாதிப்புதான் என்பதை இயக்குநர் முருகதாஸே ஒப்புக் கொண்டுள்ளார்.
இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் பார்த்து ‘துப்பாக்கி' படத்துக்கு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற 9-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்தப் படத்துடன் போடா போடி, கள்ளத்துப்பாக்கி போன்றவை மோதுகின்றன.
Post a Comment