'ஹேக்கர்' ஆனார் அஜீத்!

|

Ajith Kumar Turns Hacker

அஜீத், ஆர்யா முதன் முறையாக இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புக்காக படப்பிடிப்பு குழுவினர் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் 2ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. இதில் அஜீத்தும் ஆர்யாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதற்காக அஜீத் மும்பை சென்றுள்ளார். ஏற்கனவே சேட்டை படப்பிடிப்புக்காக ஒரு மாதம் மும்பையிலேயே முகாமிட்டுள்ள ஆர்யா, அஜீத்துடன் நடிப்பதற்காக மேலும் 15 நாட்கள் அங்கு தங்குகிறார்.

சினிமாவில் பல அவதாரங்களை எடுத்துள்ள அஜீத் இந்த படத்தில் கம்யூட்டர் ஹேக்கராக நடித்திருக்கிறாராம். தல ரசிகர்களுக்கு இது மிகச் சிறந்த படமாக அமையும் என்கின்றனர் படத் தயாரிப்பாளர்கள்.

தெலுங்கு நடிகர் ராணா இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அஜீத் பற்றி அவர் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து வருவது பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம்.

அஜீத்துடன் சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சரேக்கர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment