மும்பையில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்களால் பரபரப்பு

|

Fans Mob Ajith

மும்பை: விஷ்ணுவர்த்தனின் புதிய படத்தின் ஷூட்டிங்குக்காக மும்பைக்குப் போன இடத்தில் அஜீத்தை ரசிகர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து முற்றுகையிட்டதால் ரசிகர்களின் அன்புப் பிடியில் அவர் சிக்க நேரிட்டது.

பி்ல்லா 2வின் பெரும் தோல்விக்குப் பின்னர் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பைக்கு போயுள்ளது. 2 மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

அஜீத் படத்தின் ஷூட்டிங் நடக்கும் தகவல் தெரிந்து தமிழ் ரசிகர்கள் பலரும் திரண்டு வந்து விட்டனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அஜீத்தை ஆர்வத்தில் முற்றுகையிட்டு விட்டனர். பலர் அஜீத்தின் கைகளைப் பிடித்து குலுக்கினர். பலர் ஆட்டோகிராப் கேட்டனர்.

இதனால் ரசிகர்களின் அன்புப் பிடியில் அஜீத் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க போலீஸார் வர வேண்டியதாயிற்று.ஆனால் அவர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் பெரும் சிரமப்பட்டு அவர்கள் ரசிகர்களைக் கலைத்தனர். பின்னர் தடங்கலாகி நின்ற படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.

 

Post a Comment