
சென்னை : ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க வின்சென்ட் செல்வா இயக்கும் படம், 'துள்ளி விளையாடு'. யுவராஜ், தீப்தி, பிரகாஷ் ராஜ், ஜெயப்பிரகாஷ், சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். காமெடி கலந்த த்ரில்லர் கதையான இதில் பிரகாஷ் ராஜ் வித்தியாசமான வில்லனாக நடித்துள்ளார். தனக்கு சாதகமான தகவல் வந்தால் மகிழும் அவர், அதை தனது குழுவினருடன் கொண்டாடுவது போல ஒரு பாடல் இதில் இடம்பெற்றுள்ளது. 'சண்டிக் குதிர சண்டிக் குதிர வண்டிகுள்ள சிக்காத ஒண்டிக்குதிர' எனத் தொடங்கும் அந்த வேகமான பாடலுக்கு பிரகாஷ் ராஜ் ஆடியுள்ளார். அவருடன் மும்பை மாடல் அங்கீதாவும் ஆடியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
Post a Comment