சென்னை: நடிகை நமீதா தமிழக பாஜகவில் சேர்ந்து விட்டதாக யாரோ சிலர் புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர். இதையெல்லாம் தயவு செய்து நம்பாதீர்கள் என்று நமீதாவே மறுப்பு தெரிவித்துள்ளார்.
சூரத் சுந்தரி நமீதாவுக்கு தமிழில் இப்போது பெரிய அளவில் படங்கள் இல்லை. இருந்தாலும் அவர் பிசியாகத்தான் இருக்கிறார். மானாட மயிலாட தவிர ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கொடி கட்டிப் பறக்கினார்.
குஷ்பு எப்படி திமுகவில் கவர்ச்சி பேச்சாளராக, பேச்சுப் பீரங்கியாக வலம் வருகிறாரோ அதேபோல நமீதவும் பாஜகவின் கவர்ச்சிப் பேச்சாளராக வலம் வரப் போகிறார் என்றும் செய்திகள் படு வேகமாக உலா வந்தன.
ஆனால் இதை நமீதா மறுத்துள்ளார்... அய்யோ, நான் அரசியலில் சேரவே இல்லையே. தமிழக பாஜகவில் நான் சேர்ந்து விட்டதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறு. அப்படியெல்லாம் எந்த பிளானும் என்னிடம் இல்லை. யாரோ தவறாக கிளப்பி விட்டுள்ளனர். நான் வழக்கம் போல சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
மச்சான்ஸ், நமீதாவே விளக்கிட்டாங்க.. நம்பிடாதீங்க..