ஜோதி கிருஷ்ணா திருமண வரவேற்பு... ரஜினி நேரில் வாழ்த்து

|

சென்னை: இயக்குநர் ஜோதி கிருஷ்ணா - ஐஸ்வர்யா திருமண வரவேற்பில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajini wishes jothikrishna aishwarya couple
எனக்கு 20 உனக்கு 18, கேடி, ஊலலல்லா படங்களின் இயக்குநரும் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகனுமான ஜோதி கிருஷ்ணாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு உலகநாயகன் கமல் ஹாஸன் நேரில் வந்து வாழ்த்தினார்.

ஜோதிகிருஷ்ணா - ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னை லீலா நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக வந்தார் ரஜினி. அவர் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைச் சொன்னார் சூப்பர் ஸ்டார்.

இந்த நிகழ்ச்சியில் அஜீத் தன் மனைவியுடன் வந்திருந்து வாழ்த்தினார். சூர்யாவும் தன் மனைவி ஜோதிகாவுடன் நிகழ்ச்சிக்கு வந்தார். விஜய் வரவில்லை. அவர் மனைவி சங்கீதா மட்டும் வந்திருந்தார்.

 

Post a Comment