டெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, ஷோலே இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் பாடகர் கைலாஷ் கேர் ஆகியோருக்கு பத்ம விருது கிடைக்கலாம் என்று தெரிகிறது.
பத்ம விருதுகளில் கலை பிரிவில் 3 பேரின் பெயர்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அது கடந்த ஜூலை 18ம் தேதி மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் பாடகர் கைலாஷ் கேர் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
பத்ம விருதுகள் பொதுவாக மறைந்தவர்களுக்கு கொடுப்பதில்லை என்றாலும் ராஜேஷ் கன்னா அந்த விருதைப் பெற தகுதியானவர் என்று கருதி அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு மறைந்த பிரபல இந்தி பாடகர் புபென் ஹசாரிகாவுக்கு இறப்புக்கு பிறகு தான் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் பெயர்கள் பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் பிரதமர் தலைமையிலான பத்ம விருதுகள் குழு தான் இறுதி முடிவை எடு்கக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment