யமுனா படத்தில் சுடுகாட்டுச் சூழலில் காதல் பாட்டு எழுதியது புதிய அனுபவமாக இருந்ததாக கவிஞர் வைரமுத்து கூறினார்.
ரீஹரி பாலாஜி மூவிஸ் தயாரிக்கும் படம் ‘யமுனா'. இப்படத்தில் நாயகனாக சத்யா, நாயகியாக ஸ்ரீரம்யா ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வசனம் எழுதி இயக்குகிறார் இ.வி.கணேஷ் பாபு. இலக்கியன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
யமுனா படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இவ்விழாவுக்கு கவிஞர் வைரமுத்து தலைமையேற்றார்.
நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இப்படத்தில் பாடல் எழுதிய தருணம் குறித்து கவிஞர் வைரமுத்து பேசும்போது, "இப்படத்தில் நாயகனும், நாயகியும் ஊருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடுவார்கள். அவர்களது உறவினர்களோ அவர்களை துரத்துவார்கள்.
அப்போது, இருவரும் தப்பிப்பதற்காக சுடுகாட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள். அப்போது, நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஏற்படும் ரொம்ப ஆழமான காதலை பாடலாக வடிக்கச் சொன்னார்கள். பிணம் எரிந்து கொண்டிருக்கும் பின்னணியில் இவர்களுக்குள் ஏற்படும் காதலாக எழுதியது எனக்கு புதிதாக இருந்தது," என்றார்.
Post a Comment