
சூர்யா படத்தில் பிரகாஷ்ராஜுக்கு பதிலாக புதிய வில்லன் நடிக்கிறார். சூர்யா, அனுஷ்கா நடித்த படம் 'சிங்கம்Õ. ஹரி இயக்கினார். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சூர்யா, அனுஷ்காவுடன் ஹன்சிகா இணைந்து நடிக்கிறார். முதல் பாகத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்தார். 2ம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை. இப்படம் பற்றி சூர்யா கூறியதாவது: சிங்கம் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் ஏற்றார்கள். அந்த வெற்றிதான் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க வைத்திருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட்டும் நிறைய ஆக்ஷன் காட்சிகளுடன் நகைச்சுவை காட்சிகளும் உள்ளடக்கி இருக்கிறது.
'இரண்டாம் பாகத்திலும் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறாரா?Õ என்கிறார்கள். முரட்டுத்தனமான வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் கேரக்டர் முதல் பாகத்திலேயே முற்றுபெற்றுவிட்டது. எனவே 2ம் பாகத்தில் புதிய வில்லன் நடிக்கிறார். கூடுதலாக 4 வேடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் நடித்தவர்களே ஏற்கிறார்கள். சிங்கம் படம் இந்தியில் அஜய் தேவ¢கன் நடிக்கவும், கன்னடத்தில சுதீப் நடிக்கவும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. எனவே 2ம் பாகம் இயக்கும்போது எங்களுக்கு பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்தவர்கள், 2ம் பாகம் உருவாவதை கவனமுடன் கண்காணிக்கிறார்கள்.
Post a Comment