சென்னை: ஷாப்பிங் போகும் விஷயத்தில் தன்னிடம் பெண்கள் கூட தோற்றுவிடுவார்கள் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு ஷாப்பிங் என்றால் அவ்வளவு இஷ்டமாம். கடை கடையாக ஏறி இறங்கி தனக்கு பிடித்ததை வாங்க மெனக்கெடுபவராம். அவ்வளவு பொறுமையாக மணிக்கணக்கில் ஷாப்பிங் செய்வாராம் சிம்பு. அதனால் சிம்பு ஷாப்பிங் கிளம்புகிறார் என்றாலே அவரது நண்பர்கள் ஓட்டம் பிடித்துவிடுவார்களாம்.
யார் அவருடன் மணிக்கணக்கில் அலைவது என்று இடத்தை காலி செய்துவிடுவார்களாம்.
இது குறித்து சிம்பு கூறுகையில்,
ஷாப்பிங் செய்யும் பொறுமை, ஆசை ஆகியவற்றில் பெண்கள் கூட என்னிடம் தோற்றுவிடுவார்கள் என்றார்.
என்ன பெண்களே சிம்பு சொல்வதைக் கேட்டீர்களா?
Post a Comment