சென்னை: தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மம்மூட்டி மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக அவர் நடிக்கும் மலையாள படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒய் திஸ் கொலவெறி பாடல் பிரபலமானதற்குப் பிறகு தனுஷ் பாலிவுட் சென்றார். அங்கு சோனம் கபூருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மாலிவுட்டுக்கும் போகிறார். தாம்ப்சன் இயக்கத்தில் ம்மூட்டி, திலீப் நடிக்கும் காமத் அன்ட் காமத் மலையாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.
முன்னணி ஹீரோவாக உள்ள அவர் 2 ஹீரோக்கள் உள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் உண்டு. மம்மூட்டி மீது தான் வைத்திருக்கும் மரியாதை காரணமாகத் தான் அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் தாம்ப்சன் கூறுகையில்,
காமத் அன்ட் காமத் கதையை தனுஷிடம் கூறியதுமே அவருக்கு பிடித்துவிட்டது. படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டார். அவர் கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றார்.
Post a Comment