டேமேஜ் பண்ணாதீங்க! - குத்து ரம்யா

|

Dont Damage Me With False Reports   

தப்புத் தப்பா எழுதி என் பெயரை டேமேஜ் பண்ணாதீங்க, என்று கேட்டுக் கொண்டுள்ளார் குத்து ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பந்தனா.

'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. 'வடசென்னை' படத்தில் இப்போது நடிக்கிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையான இவர், காங்கிரஸ் கட்டியின் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவியாக உள்ளார்.

ஆனால் எப்போதும் காதல் கிசுகிசு, தயாரிப்பாளருடன் தகராறு என சர்ச்சைகளின் நாயகியாகத் திகழ்கிறார்.

பேட்டி கேட்டு வருபவர்களையும் துரத்திவிடுவது இவரது வழக்கமாம். சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் இதுபற்றி கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதில்:

நான் யாருடைய வற்புறுத்தலுக்கும் பணிய மாட்டேன். என் விருப்பப்படிதான் வாழ்கிறேன்.

சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். சினிமா வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. என்னைப் பற்றி பரவும் வதந்திகளை நான் கண்டு கொள்வதில்லை.

காதல், திருமணம் போன்றவை எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம். அதை பொதுவில் பேச முடியாது. என் விருப்பப்படி அந்த தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறேன்.

அரசியலில் நிறைய சாதிக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

என்னைப் பற்றி இந்த அளவு வெளியில் தெரிந்தாலே போதும். ஆனால் சிலர் தேவையில்லாமல் எனது சொந்த வாழ்க்கையை எழுதுகிறார்கள். கண்டதையும் எழுதி என்னை டேமேஜ் பண்ண வேண்டாம்," என்றார் திவ்யா.

 

Post a Comment