சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒரு தேவதை இருப்பார்... மனம் கவர்ந்த அந்தப் பெண்ணை அவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நடிகர் சிம்புவுக்கும் ஒரு தேவதை கிடைத்துள்ளார்... அவர்தான் ஹன்சிகா மோத்வானி. வாயைத் திறந்தாலே ஹன்சிகா புகழ்தான் பாடுகிறாராம் சிம்பு.
சார்மி தொடங்கி திரிஷா, குத்து ரம்யா வழியாக நயனதாராவைக் கடந்து வரலட்சுமி வரை பலருடனும் ஜோடி போட்டு விட்டார் சிம்பு. ஆனால் தன்னுடன் ஜோடியாக நடித்தவர்களிலேயே தன்னை மிகவும் கவர்ந்தவர் ஹன்சிகாதான் என்று ஒரே போடாகப் போடுகிறார் சிம்பு.
ஹன்சிகாவை தேவதை என்று போற்றிப் பாடுகிறார் சிம்பு. அவரைப் போல அழகும், இளமையும் யாருக்கும் கிடையாது என்றும் புளகாங்கிதப்பட்டுப் பேசுகிறார்.
இதுகுறித்து சிம்பு கூறுவதைக் கேளுங்கள்...
ஹன்சிகா ஒரு தேவதை. மிகவும் அழகானவர். யாராக இருந்தாலும் அவரைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல தோன்றும். அப்படிப்பட்ட பெண்தான் ஹன்சிகா.
அடுத்து நான் நடிக்கும் வேட்டை மன்னன், வாலு இரண்டு படங்களிலும் எனக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவைத்தான் தேர்வு செய்திருக்கிறேன். அவரது அழகும், சொக்க வைக்கும் இளமை இரண்டையும் மனதில் வைத்துத்தான் அவரை தேர்வு செய்தேன். அவர் ஒரு தேவதை....என்று புல்லரித்துப் போய் கூறுகிறார் சிம்பு.
நிஜம்தான்.. தேவதைகளைப் பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத்தான் தோன்றும், சிம்பு மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன...?
+ comments + 1 comments
siva;idhathane unga ovoru padathulaum solringa simbu vera pudusa sollunga simbu
Post a Comment