ரீலும் ரியலும் மோதிய கலக்கல் கபடிப் போட்டி

|

சின்னத்திரை நடிகைகளும், கபடி சாம்பியன்களும் இணைந்து விளையாடிய கலக்கல் கபடிப் போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. கபடி மட்டுமல்லாது ஆட்டம், பாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

chinnathirai actress kalakkal kabaddi kpl
Close
 
ஜெயாடிவியில் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கலக்கல் கபடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மிகச்சிறந்த கபடி விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

இதில் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் அவ்வப்போது போட்டியில் பங்கேற்று விளையாட்டு வீராங்கனைகளையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்த வாரம் சனிக்கிழமை தினத்தன்று சின்னத்திரை நடிகைகளுக்கும், ஒரிஜினல் கபடி விளையாட்டு வீராங்கனைகளுக்கும் நடைபெற்ற போட்டி ஒளிபரப்பானது. ரீல் மற்றும் ரியல் அணியினர் மோதிய இந்த விளையாட்டுப் போட்டு ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

சின்னத்திரை நடிகைகள் மகாலட்சுமி, ரம்யா, ஷிவானி, ஜோதி, நீபா, ஸ்ரீஜா ஆகியோர் ஒரு அணியாகவும், கபடி விளையாட்டு வீராங்கனைகள் மற்றொரு அணியாகவும் விளையாடினர். இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல விளையாடியதை ரசிகர்கள் விசிலடித்து உற்சாகப்படுத்தினர்.

இதில் ரியல் அணி 29 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. நடிகை ஷிவானி சிறந்த ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார். போட்டியின் முடிவில் சின்னத்திரை நடிகைகள் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதில் நீபா சிறந்த நடன நாயகியாக அறிவிக்கப்பட்டார்.

மேக்அப் போட்டு நடித்த சின்னத்திரை நடிகைகள் வியர்க்க விறுவிறுக்க கபடி விளையாடியதை ஈரோடு நகரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

 

Post a Comment