சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி மற்றும் தாமோதரன் ஆகியோர் வந்தனர். கார் பார்க்கிங் பகுதியில் சேலையூரை சேர்ந்த குமாருக்கும் தாமோதரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தாமோதரன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த சிலர், குமாரை தாக்கி தியேட்டரில் ரகளை செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார், நடிகை புவனேஸ்வரியையும், தாமோதரனையும் தேடிவருகின்றனர்.
Post a Comment