
சென்னை: கோவை ஸ்ரீராஜ் தயாரிக்கும் 3டி படம், 'நான்காம் பிறை'. பிரபு, நாசர், மனோபாலா, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் வினயன் கூறியதாவது: இது 3டி படம். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை மிரட்ட வேண்டும் என்று ருமேனியாவில் உள்ள டிராகுலா மாளிகையில் முக்கிய காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். ஸ்டீரியோ பணிகளை, லண்டனைச் சேர்ந்த டியானா சில்விஸ்டர் கவனிக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கு கிளாமர் நடிகை ஷனா ஓபராய், ஒரு பாடல் காட்சியில் ஆடியுள்ளார். டிராகுலா வேடத்தில் சுதிர் நடிக்கிறார். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் செய்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள படம். விரைவில் ரிலீசாகிறது.
Post a Comment