தமிழ் படங்களை ஏற்க மறுக்கிறார் பிரியாமணி

|

Priyamani refusing to accept Tamil films 'தமிழ் பட கதைகள் என்னை கவராததால் ஏற்கவில்லை என்றார் பிரியாமணி. இது பற்றி அவர் கூறியதாவது: டோலிவுட்டில் 'அங்குலிகா என்ற படத்தில் நடிக்கிறேன். இதுவொரு பொது கருத்துள்ள கதை. இதற்குமுன் இப்படியொரு கதாபாத்திரம் செய்யவில்லை. இப்படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. ஒரு பகுதியில் இளவரசியாக நடிக்கிறேன். இது வழக்கமான இளவரசி கதாபாத்திரம் இல்லை. முந்தைய பிறவியின் கதாபாத்திரம். கடந்த கால வாழ்க்கையை குறிக்கும் இந்த கதையில் ஆத்மாவை சந்திக்கிறேன்.

அதன்பிறகு நடப்பதுதான் கதை. அடுத்தமாதம் முதல்வாரம் ஷூட்டிங். இதுதவிர இன்னொரு தெலுங்கு படத்தில் சமுத்ரா இயக்கத்தில் நடிக்கிறேன். இது ஹீரோயினை மையமாக வைத்த கதை. வித்தியாசமான அணுகுமுறையுடன் இதன் கரு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு ஜோடி கிடையாது. ஆனாலும் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எதுவும் என்னை கவரவில்லை. அதனால் எந்த படத்தையும் ஏற்கவில்லை. இவ்வாறு பிரியாமணி கூறினார்.
 

Post a Comment