சென்னை: விஷாலுடன் நடித்துள்ள சமர் படத்தில் த்ரிஷா தன் சொந்தக் குரலில் பேசுகிறாராம்.
த்ரிஷாவுக்கு தமிழ் தெரியும் என்றாலும் அவரது படங்களில் அவருக்கு வேறு யாராவது டப்பிங் பேசி வருகிறார்கள். தனது நீண்ட நாள் நண்பரான விஷாலுடன் சேர்ந்து த்ரிஷா சமர் படத்தில் நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் படம் நல்லா வந்திருக்கு என்று இயக்குனர் திரு மகிழ்ச்சியாக உள்ளாராம்.
இது குறித்து திரு கூறுகையில்,
சமர் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர டப்பிங் பணியும் நடக்கிறது. இந்த படத்தில் த்ரிஷா தன் சொந்தக் குரலில் பேசுகிறார். ஆயுத எழுத்து, மன்மதன் அம்பு மற்றும் மங்காத்தாவுக்கு பிறகு அவர் சொந்தக் குரலில் பேசும் படம் இது தான் என்று நினைக்கிறேன். விரைவில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். பட ரிலீஸ் தேதியை அப்போது அறிவிப்போம். விஷால், த்ரிஷா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஜே.டி. சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்திருப்பது படத்தின் ஹைலட் என்றார்.