
சென்னை : வி.பி.ஸ்டில் சார்பில் பெரியசாமி ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'ஈகோ'. வேலு, அனஸ்வரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சக்திவேல் இயக்குகிறார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. பின்னர் படம் பற்றி சக்திவேல் கூறியதாவது: 'ஈகோ'வை ஆங்கில தலைப்பு என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாயகன் பெயர் ஈஸ்வர், நாயகி பெயர் கோமதி. இரண்டின் முதல் எழுத்தைக் கொண்டு 'ஈகோ'வாக்கி இருக்கிறோம்.
இருவருக்கும் இடையில் அடிக்கடி ஈகோ பிரச்னை வருவதாலும் இந்த தலைப்பு பொருத்தமானதாக வைக்கப்பட்டுள்ளது. நாயகன் பிரச்னையில் நாயகியும், நாயகி பிரச்னையில் நாயகனும் சிக்கி கொண்டு எப்படி வெளியே வருகிறார்கள் என்பது படத்தின் கதை. நான் இயக்கிய 'கந்தகோட்டை' ஆக்ஷன் படமாக இருந்ததால் இதை காமெடி படமாக இயக்கி உள்ளேன். என்னைத் தவிர அனைவரும் புதுமுகங்கள். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
Post a Comment