விஜய் டிவியின் இசை விருது வழங்கும் விழாவில் 2011ம் ஆண்டின் சிறந்த இசை அமைப்பாளர் விருது ஹாரீஸ் ஜெயராஜ்க்கு வழங்கப்பட்டது. பாடகர் ஹரிசரன், பாடகி சுவேதாவிற்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகர் நடிகையர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக விருதுகளை வழங்கும் விஜய் டிவி கடந்த இரண்டு ஆண்டுகளாக இசை விருதுகளை வழங்கி வருகிறது.
இசைத்துறையைச் சார்ந்த அனைவருக்கும் இதில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான நடுவர்களாக கவுதம் மேனன், ஸ்ரீனிவாஸ், ஜேம்ஸ்வசந்தன், ஆனந்த் வைத்தியநாதன், மால்குடி சுபா ஆகியோர் பங்கேற்றனர்.
சிறந்த இசை அமைப்பாளர் விருது ‘எங்கேயும் காதல்' படத்தில் இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வழங்கப்பட்டது. தெய்வத்திருமகள் படத்தில் பாடிய ஹரிசரன் சிறந்த பாடலாசிரியராகவும், சிறந்த பாடகிகளாக சின்மயி, சுவேதா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
என்றைக்கும் தெவிட்டாத குரலாக எவர்கிரின் வாய்ஸ் அவர்டு பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வழங்கப்பட்டது. வாகை சூடாவா படத்தில் ‘சரசர சாரக்காத்து...' பாடலை எழுதிய வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.
பெரும்பாலான படங்களில் சிறந்த பாடல்களை எழுதியதற்காக நா. முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது. ‘ஒத்த சொல்லாலே' பாடலை பாடிய வேல்முருகன் சிறந்த நாட்டுப்புற பாடியதற்காக விருது வழங்கப்பட்டது.
கோ படத்தின் என்னமோ ஏதோ... பாடல் 2011ம் ஆண்டில் சிறந்த பாடலாக தேர்ந்தெடுப்பட்டது.
ஏழாம் அறிவு படத்தில் யம்மா யம்மா... பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதினை பெற்றார். மயக்கம் என்ன படத்தில் பிறைதேடும்... பாடலைப் பாடிய சைந்தவிக்கு சிறந்த பின்னணிப் பாடகி விருது வழங்கப்பட்டது.
சிறந்த இசைஅமைப்பாளர் பாடிய பாடலாக ஆடுகளம் படத்தில் ‘யாத்தே யாத்தே'... பாடலை பாடிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு விருது வழங்கப்பட்டது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான ரசிகர்களும், திரை உலகைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் 11ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
Post a Comment