சந்தானம் இனி 'காமெடி சூப்பர்ஸ்டார்'...!

|

New Title Santhanam

சென்னை: வைகைப் புயல், சின்னக் கலைவாணர், சின்ன தளபதி, குட்டி தளபதி, தக்கனூண்டு தளபதி என்ற வரிசையில்... அடுத்து ஒரு புதிய பட்டம் ஒரு நடிகருக்கு கொடுக்கப் போகிறார்கள். அந்தப் பட்டத்தைப் பெறப் போவது சந்தானம். அவருக்கு்க கொடுக்கப் போகும் பட்டத்தின் பெயர் காமெடி சூப்பர் ஸ்டார்.

சேட்டை படக் குழுவினர்தான் இந்த பட்டத்தை டைட்டில் கார்டில் போட்டு சந்தானத்தை உசுப்பேத்தி விடப் போகிறார்களாம். இந்த டைட்டிலை வச்சுக்கவா, வேண்டாமா என்பதை ஒரிஜினல் சூப்பர் ஸ்டாருக்கே போன் போட்டுக் கேட்டாராம் சந்தானம். ரஜினியும், வெரிகுட் என்று கூறி ஆட்சேபனை தெரிவிக்கவில்லையாம்.

சந்தானத்தின் காட்டில் இப்போது செம மழை. வடிவேலு வேறு பீல்டில் இல்லை, விவேக்கும் முன்பு போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. கஞ்சா கருப்பும் எடுபடாமல் போய் விட்டார். இதனால் ஒண்டி ஆளாக சண்டிக் குதிரை போல ஓடிக் கொண்டிருக்கிறார் சந்தானம். அவரது கையில் ஏகப்பட்ட படங்களாம்.

அந்த வகையில் ஆர்யாவுடன், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்குப் பின்னர் அவர் இணைந்து நடிக்கும் படம் சேட்டை. கண்ணன் இயக்கியுள்ளார். காமெடிக்கே முக்கியத்துவமாம்.

இந்த நிலையில்தான் சேட்டை படக் குழுவினர் ஒன்று கூடி விவாதித்து சந்தானத்திற்கு காமெடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை அளிக்க முடிவு செய்துள்ளனராம்.

இருப்பினும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே என்பதால் ரஜினிக்கே போன் போட்டுக் கேட்டாராம் சந்தானம். அதற்கு ரஜினி சற்றும் தாமதிக்காமல் வெரிகுட் என்று பாராட்டினாராம். மேலும், சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் என்னுடைய பெயரில் பதிவு செய்யப்படவில்லையே என்றும் சந்தானத்திடமே காமெடியாகப் பேசினாராம்.

ஆக, சந்தானத்தை கொம்பு சீவி விட்டாயிற்று, இனி அது எங்கு போய் நிற்கப் போகிறதோ...!

 

+ comments + 2 comments

27 November 2012 at 14:57

விஜய் TV யிலிருந்து சினிமாவுக்கு வந்ததனால் பேசாமல் 'காமெடி கிங்" சந்தானம் என்று வைத்திருக்கலாம்...............

Post a Comment