கோவிலுக்காக படம் இயக்கிய இயக்குனர்

|

சென்னை : செல்வா திரைக்கூடம் சார்பில் ராஜசூரியன் தயாரித்து, இயக்கி, பாடல்கள் எழுதியுள்ள படம், 'நேசம் நெசப்படுதே'. வேந்தன், அரசி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். விஜய் மந்த்ரா இசை. சாய்சிவன் ஒளிப்பதிவு. படம் பற்றி ராஜசூரியன் கூறியதாவது: சினிமாவில் பாடல் எழுதுவதற்காக வந்தேன். கசப்பான அனுபவம் காரணமாக திரும்பி விட்டேன். நான் ஒரு கோவில் கட்டுவதாக கனவு கண்டேன்.

அந்த கனவில் வந்த கோவிலைப் போலவே, ஸ்ரீ விஷ்ணு துர்கா கோவிலை, பொன் முச்சந்தி கிராமத்தில் கட்டினேன். அன்று முதல் கடந்த 82 மாதங்களாக அன்னதானம் செய்கிறேன். எனது கோவிலை பிரபலப்படுத்தவும், சினிமா லட்சியத்தை நிறைவேற்றவும் இந்தப் படத்தை தயாரித்து இயக்கினேன். நாயகனும் நாயகியும் எந்த காட்சியிலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள். கவர்ச்சியும், விரசமும் இல்லாத கிராமத்து காதல் கதை. அடுத்த மாதம் வெளிவருகிறது.
 

Post a Comment