ஆண்களை துடைத்துப் போடும் டிஸ்யூ பேப்பர்கள் என்று கூறிய சோனா மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சோனா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்த சங்கத்தின் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அருள்துமிலன், "ஆண்களை டிஸ்யூ பேப்பராக பயன்படுத்தி செக்ஸ் வைத்து விட்டு தூக்கி எறிந்துவிடுவேன். திருமணம் செய்து வாழ்வது முட்டாள்தனமானது. அதைவிட முட்டாள்தனமானது ஆண்களுடன் சேர்ந்து வாழ்வது என்று நடிகை சோனா ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு கருத்துக்களையும் நடிகை சோனா திரும்பப் பெற்று, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியுருந்தோம்.
ஆனால், அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்கவில்லை. இதனால்தான் நாங்கள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டமாக நடிகை சோனா மீது கிரிமினல் வழக்கு தொடருவோம்," என்றார்.
Post a Comment