
சென்னை: 'நந்தனம்Õ படத்துக்கு உதடுகள் ஒட்டாத பாடல் பதிவானது. சிவாஜி தேவ், மித்ரா நடிக்கும் படம் 'நந்தனம்Õ. இப்படத்தை என்.சி.ஷியாமளன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: படங்களில் ஏதோ ஒரு புதுமையை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 'மண்ணில் இந்த காதலின்றிÕ என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல் சில நிமிடங்களுக்கு மூச்சுவிடாமல் பாடி ஹிட்டானது. அப்படியொரு முயற்சியாக விவேகா எழுதியுள்ள 'ஏதோ ஏதோ உயிரிலேÕ என்ற பாடல் முழுவதும் உதடுகள் ஒட்டாத வார்த்தைகள் பயன்படுத்தி எழுதப்பட்டது. உதடுகளில் ஒட்டாத பாடலாக இருந்தபோதும் எல்லோர் மனதிலும் ஒட்டும். நீயே என் சினேகத் தீயே என்ற பாடல் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டது. 'இது என்ன வலியோÕ என்ற பாடல் பாடும்போது பாடகி சின்மயி உண்மையிலேயே அழுதுவிட்டார். கோபி சங்கர் இசை. எல்.மோகன் ஒளிப்பதிவு.
Post a Comment