பிரகாஷ்ராஜின் உன் சமையல் அறையில்

|

சென்னை : மலையாளத்தில் ஹிட்டான 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்தை, 'உன் சமையல் அறையில்' என்ற பெயரில் பிரகாஷ் ராஜ் தயாரித்து இயக்குகிறார்.
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டானப் படம், 'சால்ட் அண்ட் பெப்பர்'. ஆஷிக் அபு இயக்கி இருந்த இந்தப் படத்தில் லால், ஸ்வேதா மேனன், மைதிலி உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் ரீமேக் உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கி இருந்தார். இதை யார் இயக்குவது என்று பேச்சு எழுந்தது.

இந்நிலையில் தானே இயக்குவதாக பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, 'இந்தி, தெலுங்கு, தமிழில் நானே 'சால்ட் அண்ட் பெப்பரை' இயக்கி நடிக்கிறேன். 'தோனி' படத்துக்குப் பிறகு நான் இயக்கும் படம் இது. தமிழில் 'உன் சமையல் அறையில்' என்றும் தெலுங்கில், 'உலவச்சாறு பிரியாணி' என்றும் பெயர் வைத்துள்ளேன். டேக் லைனாக, 'லவ் இஸ் குக்கிங்' என்ற வாசகம் இடம்பெறும். என் ஜோடியாக தபு நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்' என்றார்.

 

Post a Comment