இந்தியில் நயன்தாரா படம் பிரபுதேவா அப்செட்

|

nayanthara  நயன்தாரா நடித்துள்ள படம் இந்தியில் வெளியாக இருப்பதால் பிரபுதேவா அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபுதேவாவும் நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வந்தனர். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவரான அவர் இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் இவர்கள் காதல் திடீரென முறிந்தது. இதையடுத்து படம் இயக்குவதில் பிரபுதேவாவும் நடிப்பில் நயன்தாராவும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நயன்தாரா, ராணா நடித்துள்ள தெலுங்கு படம், 'கிருஷ்ணன் வந்தே ஜகத்குரும்'. கிரிஷ் இயக்கி உள்ள இந்தப் படம், தமிழில் 'ஓங்காரம்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ராணா இந்தி படங்களிலும் நடித்துள்ளதால் இதை இந்தியில் டப் செய்ய உள்ளனர். இதையடுத்து இதன் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடக்க உள்ளது. இதற்காக ராணாவும் நயன்தாராவும் மும்பையில் முகாமிட உள்ளனர். இதை கேள்விபட்ட பிரபுதேவா, அவர்கள் வரும் நேரத்தில் மும்பையில் இருக்க வேண்டாம் என்று நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரபுதேவா தரப்பில் கூறும்போது, ''இந்தியில் 'ரவுடி ரத்தோர்' படத்தை பிரபுதேவா இயக்கும்போதுதான் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இந்தியில் முக்கியமான இயக்குனராகி விட்டார் பிரபுதேவா. பிரிவுக்குப் பிறகு நயன்தாரா நடித்து வெளிவரும் முதல் படம், 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்'. இந்தப் படத்தின் புரமோஷனை மும்பையில் நடத்தும்போது, காதல் முறிவு விவகாரம் பற்றி நயன்தாராவிடம் கேட்பார்கள். இதனால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். அதனால் அந்த நேரத்தில் பிரபுதேவா மும்பையில் இருக்கமாட்டார்'' என்றனர்.
 

Post a Comment