எனவே விலக முடிவு செய்தேன். இதுபற்றி நானும் வெங்கட்பிரபுவும் மனம்விட்டு பேசினோம். அப்போது குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இஷ்டமில்லை என்பதை தெரிவித்ததுடன் விலகி கொள்ள விரும்புவதையும் தெரிவித்தேன். என் முடிவை அவர் ஏற்றுக்கொண்டார். இன்னொரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வரும்போது நடிப்பேன். தெலுங்கு படத்தில் கவனத்தை திருப்பிவிட்டீர்களா? என்கிறார்கள் தமிழ் படங்கள்தான் என்னை நடிகையாக அங்கீகரித்தது. 'மயக்கம் என்ன' படத்திற்காக 5 விருதுகளும். 'ஒஸ்தி' படத்திற்காக ஒரு விருதும் பெற்றேன். தமிழ் படங்கள் மீது எனக்கும். என் மீது அங்குள்ளவர்களுக்கும் அக்கறை இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது நிச்சயம் ஏற்பேன். அதற்காக காத்திருப்பேன். இதற்கிடையில் 4 தெலுங்கு படங்களில் இப்போது நடித்து வருகிறேன்.
Post a Comment