சென்னை : தமிழில், 'காதல் கிசுகிசு', 'அன்பு', 'மஞ்சள் வெயில்' உட்பட சில படங்களில் நடித்த பாலா, தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். அருணாசலம் பிக்சர்ஸ், டோலிவுட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, சந்தியா, நரேன், ரியாஸ்கான், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, மது நீலகண்டன். இசை, அல்போன்ஸ். பாடல்கள், பிறைசூடன். வசனம், சீனிவாச மூர்த்தி.
இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர், நிருபர்களிடம் பாலா கூறும்போது, ''காவல் துறை அதிகாரிகள் சிலர், மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதற்காக குழு அமைக்கப்பட்டு, கொலைகாரர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது கதை. அடுத்த மாதம் ரிலீசாகிறது' என்றார்.
Post a Comment