ஜல்லிகட்டு வீரர்கள் நடிக்கும் படம்

|

Jallikattu players starring film ஜல்லிகட்டு வீரர்கள் நடிக்கும் கதை படமாகிறது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு வீரர்கள் பற்றிய கதை 'பூர்வகுடி' என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் இப்ராகிம் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிகட்டு விளையாட்டை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தலாமா? கூடாதா? என்பதற்காக கோர்ட் வரை விவகாரம் சென்றது. தற்போது மிகுந்த பாதுகாப்புடன் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்காக தேனி பகுதியில் பிரத்யேக செட் அமைத்து நூற்றுக்கும் அதிகமான நிஜ மாடுபிடி வீரர்களை அழைத்து வந்து விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு காட்சி 7 நாட்கள் படமாக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க ஜல்லிகட்டு விளையாட்டு எவ்வளவு உன்னதமானது என்பதை 50க்கும் அதிகமான புதுமுகங்களை வைத்து தேனி வட்டார வழக்கு பேசும் மக்களோடு படப்பிடிப்பு நடந்தது. ஈஸ்வர் ஹீரோ. மதுஸ்ரீ ஹீரோயின். அருண் ஒளிப்பதிவு. புரூஸ் இசை. எம்.குமார் தயாரிப்பு.
 

Post a Comment