மும்பை:நடிகை வித்யா பாலனுக்கும் யுடிவியின் சித்தார்த் ராய் கபூருக்கும் வரும் டிசம்பர் 14-ம் தேதி திருமணம் நடக்கிறது.
‘பரினீதா', ‘பா', ‘கஹானி', ‘தி டர்ட்டி பிக்சர்' உள்பட பல படங்களில் நடித்தவர், வித்யாபாலன்.
‘தி டர்ட்டி பிக்சர்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர். பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பெண்ணான இவருக்கும், யு.டி.வி. நிறுவனத்தின் நிர்வாகி சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்கள் காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, திருமணம் முடிவாகி இருக்கிறது.
வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணம் டிசம்பர் 14-ந் தேதி மும்பையில் நடக்கிறது.
இந்த திருமணம் வித்யா பாலன் குடும்ப வழக்கப்படி தமிழ் முறைப்படியும், சித்தார்த் ராய் கபூரின் குடும்ப வழக்கப்படி பஞ்சாபி முறைப்படியும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமான திருமண வரவேற்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
Post a Comment