மலைக்க வைக்கும் கவர்ச்சியுடன் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகை மும்தாஜ் மலையாள திரைப்படம் மூலம் மீண்டும் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டி. ராஜேந்தரால் கதாநாயாகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் மும்தாஜ். குஷி படத்தில் கட்டிப் புடி கட்டிப்புடிடா பாட்டு மூலம் கிளாமராக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். பின்னர் நமீதா உள்ளிட்ட கவர்ச்சிப் புயல்கள் தமிழ் திரை உலகை ஆக்கிரமிக்கவே காணமல் போனார் மும்தாஜ். இப்போது ஜெயா டிவியில் சிறுவர்கள் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக சேவை செய்து வருகிறார்.
ஹாசிம் மரிக்கார் இயக்கும் இந்தப் படத்தில் நிஷான், மக்பூல் சல்மான் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் லட்சுமிராயும் நடிக்கிறார்.
இதற்கு முன் ‘தாண்டவம்' என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார் மும்தாஜ். இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. எனவே 'ப்ரீவியூ' படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மும்தாஜ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.