மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் இருக்கையில் தனது மகள் சுஹானாவைப் பார்த்து தான் அதிகம் பயப்படுவாராம். இதை அவரே கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன்(15) என்ற மகனும், சுஹானா(12) என்ற மகளும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஷாருக்கான் தனது மகளுக்கு பயப்படுவார் என்பது பலருக்கும் தெரியாது.
இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,
குழந்தைகள் என்னைத் திட்டுவதால் நான் வருத்தப்பட்டதில்லை. ஏன் வீட்டுக்கு சென்றால் என் குழந்தைகள் கூட என்னைத் திட்டுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருந்தால், குழந்தைகளுக்கு பிடிக்காத எதையாவது செய்தால் உடனே என் மகள் சுஹானா என்னை திட்டித் தீர்த்துவிடுவாள். அவள் சிறியவளாக இருந்தாலும் திடமான குரலில் திட்டுவாள். அதனால் நான் அவளுக்கு பயப்படுவேன் என்றார்.
பாலிவுட்டில் பெரிய ஆளாக இருக்கும் ஷாருக் ஒரு குட்டிப் பெண்ணுக்கு பயப்படுகிறார் என்றால் அது பெரிய விஷயம் தான்.
Post a Comment