லேகா வாஷிங்டன் குறும்படத்தில் சிம்பு?

|

Simbu Work With Lekha S Short Film

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த லேகா வாஷிங்டன் ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்களில் தலை காட்டினார் இப்போது சுத்தமாக சினிமா வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் விளம்பர வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இப்போது குறும்படங்கள் இயக்க முயற்சி செய்து வருகிறாராம். சில ஸ்கிரிப்ட்களை எழுதி அதை நடிகர் சிம்புவிடம் காண்பித்தாராம். நன்றாக இருப்பதாக கூறிய சிம்பு தானே நடிப்பதாக லேகாவிடம் சொல்ல இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார் லேகா வாஷிங்டன்.

கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டனுக்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. ஆனால் இதில் லேகாவிற்கு நடிக்கத் தெரியவில்லை என்று இரண்டாவது நாளிலேயே படத்தில் இருந்து தூக்கினார் சிம்பு. எனினும் இது குறித்து இறுதிவரை வாய் திறக்க மறுத்து விட்டார் சிம்பு.

இப்போது லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்பு நடிப்பது எப்படி என்பதுதான் கோலிவுட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. விளம்பரமோ, சின்னத்திரையோ எங்கே போனாலும் சிம்புக்கு வம்பு வந்து சேரும். குறும்படத்தில் ஏதாவது குறும்புத்தனம் செய்வாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

Post a Comment