திருவனந்தபுரம் : சினிமாவுக்காக பிரசவத்தை படம் பிடிக்க அனுமதித்த ஸ்வேதா மேனன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலையாள நடிகை ஸ்வேதா மேனன், பிளஸ்சி இயக்கும் 'களிமண்' படத்தில் கர்ப்பிணியாக நடித்தார். நிஜமாகவே கர்ப்பிணியாக இருந்த அவரது பிரசவக் காட்சியை படமாக்க நினைத்து அவரிடமும் அவர் கணவர் ஸ்ரீவல்சனிடமும் அனுமதி வாங்கினார் பிளஸ்சி. பின்னர் மும்பை மருத்துவமனை ஒன்றில் ஸ்வேதாவின் பிரசவக் காட்சி படம் பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சினிமாவுக்காக, பிரசவ காட்சி படமாக்கப்பட்டதை எதிர்த்து பவுலோஸ் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'பிரசவ காட்சிகள் சினிமாவுக்காக படம் பிடிக்கப்பட்டதின் மூலம் பெண்மையை இழிவுப்படுத்தியுள்ளார் ஸ்வேதா. எனவே இந்த காட்சியில் நடித்த அவர்,, அவர் கணவர் ஸ்ரீவல்சன், பிளஸ்சி மற்றும் கேமராமேன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 5,ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளது.
Post a Comment