கள்ளத்துப்பாக்கி படத்துக்கு தடை ஏன்? : தணிக்கை அதிகாரிகளுடன் பட குழுவினர் வாக்குவாதம்

|

Why ban kallattuppakki film? : Audit authorities argue with the film crew சென்னை: புதுமுகங்கள் நடித்த 'கள்ளத்துப்பாக்கி' படத்துக்கு தணிக்கை குழு தடை கொடுத்தது. பின்னர் மறுதணிக்கைக்கு படம் திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்த பிறகு மீண்டும் சான்றிதழ் தர மறுத்தனர். தயாரிப்பாளர், இயக்குனர் தந்த விளக்கத்துக்கு பிறகு 35 கட் கொடுத்து ஏ சான்றிதழ் கொடுத்தனர். இதுபற்றி தயாரிப்பாளர் ரவிதேவன் கூறும்போது,'கள்ளத் துப்பாக்கி படத்தை முதலில் பார்த்த தணிக்கை குழுவினர் வன்முறை அதிகம் இருப்பதாக கூறி தடை விதித்தனர். பிறகு மறுதணிக்கை குழுவுக்கு விண்ணப்பித்தோம். படத்தை பார்த்தபிறகு 7 மணி நேரம் அதிகாரிகள் எங்களிடம் கேள்வி கேட்டனர்.

வன்முறை அதிகம் இருப்பதாக கூறி மீண்டும் சான்றிதழ் தர மறுத்தனர். ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் அளித்தேன். பிறகு தாங்கள் சொல்லும் காட்சிகளை வெட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக கூறினார். அதை ஏற்றுக்கொண்டோம். 35 சீன்களுக்கு கட் கொடுத்தார்கள். இதில் ஹீரோ, ஹீரோயின் ஜோடி காட்சியும் வெட்டப்பட்டது.  வன்முறையை மையமாக கொண்ட படமாக இருந்தாலும் கடைசியில் அப்படி இளைஞர்கள் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. தமிழ்செல்வன், பிரபாகரன், குட்டி ஆனந்த், விஜித், விக்கி, சாவந்திகா, சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகியாஸ் இயக்கம். முருகேசன், ரவி தேவன் தயாரிப்பு. இவ்வாறு ரவிதேவன் கூறினார்.
 

+ comments + 1 comments

2 November 2012 at 16:38

unakulam ithuum venum innumum venum ena theve illama vijay padathuku thadai vithuchala athan andavan thantha parisuda kanna ravi deva un powerukellam vijayoda pottiya ippave purunchurukkumnu ninaikuran unnalam padukka vachu.............vayulayea vidanum

Post a Comment