வதந்திகள் மனதை காயப்படுத்துகிறது : பிரியங்கா சோப்ரா வருத்தம்

|

Rumor hurts heart : Priyanka Chopra upset எனக்கும் குடும்பம் இருக்கிறது. என்னைப் பற்றி வரும் வதந்திகள் என் மனதை காயப்படுத்துகிறது என்றார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, பற்றி சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் உலவுகிறது. அதில் ஒன்று, சல்மான்கான் வீட்டிலிருந்து அதிகாலையில் அவர் வெளியேறியதாக வந்த செய்தி. இதனால் வேதனை அடைந்தார் பிரியங்கா. அவர் கூறியதாவது: என்னைப் பற்றி கடந்த சில மாதங்களாக வதந்திகள் உலா வருகிறது. என்னுடைய உணர்வுகளையும், வாழ்க்கையையும் தனிப்பட்ட முறையிலேயே பாவிக்கிறேன். 17வது வயதில் நடிக்க வந்தேன். இப்போது நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. அதிக நேரம் சினிமா விளக்குக்கு மத்தியில் கழிகிறது.

இதனால் என்னை சுற்றி நடப்பவைகள் என்னை பாதிக்காது என்று சொல்ல முடியாது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. நான் ஒரு பெண். என்னைப் பற்றி வரும் வதந்திகள் என் மனதை காயப்படுத்துகிறது. பாலிவுட்டில் எனக்கு விலை மதிப்பற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். சல்மானுடன் எனக்கு மோதல் என்று முதலில் எழுதினார்கள். அது தவறு. உண்மை என்னவென்றால் இந்த ஆண்டில் மட்டும் அவரது வீட்டுக்கு 6 முறை சென்றிருக்கிறேன். சல்மானின் சகோதரி அர்பிதா எனக்கு நெருங்கிய தோழி. ஆரம்ப கால கட்டங்களில் நடித்த சக நடிகர்கள் சிலரில் சல்மானும் ஒருவர். அவரிடம் எந்தநேரத்திலும் மனக்கசப்பு ஏற்பட்டது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் என் மீது அதிக அன்பு காட்டுவார். அதை வைத்து இப்போது எங்களை இணைத¢து பேசுகிறார்கள். இதில் உண்மை இல்லை.
 

Post a Comment