ஜாக்கிசான் இந்தியா வருகை திடீர் ரத்து

|

Jackie cancels India visit ஜாக்கிசான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படத்தின் ரிலீஸ் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. 100 படங்களில் நடித்திருக்கும் ஜாக்கிசான் 101 வது படமாக 'சைனீஸ் சோடியாக் 12 (சிஇசட் 12) என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்து வெளியான 'ஆர்மர் ஆப் காட் படத்தின் 3ம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. உலகிலேயே வேறு எங்கும் கிடைக்காத 3 அபூர்வ பொருட்களை கொள்ளையடிக்க முயல்கிறார் ஜாக்கிசான். அவரை அதிரடிப்படை துரத்துகிறது. இதன் முடிவு என்ன என்பதுதான் கதை. இதுவரை எடுக்கப்பட்ட ஜாக்கி சான் படங்களிலே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இதுதான்.

ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிசம்பர் 12ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. தற்போது அது 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு நாடுகளுக்கு ஜாக்கி சான் செல்கிறார். இந்தியா வருவதாக இருந்த திட்டத்தை பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்துவிட்டார். இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படத்தை பற்றிய புரமோஷனுக்காக ஜாக்கிசான் பாடிய பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்தியாவில் படத்தை வெளியிடும் இந்தோ ஓவர்சீஸ் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெரோஸ் இலியாஸ் தெரிவித்தார்.
 

Post a Comment