'கோல்ட் ஃபிஷ் படத்தை கவுதம இயக்கம் தயாரிக்கிறாராம்... தயாரிக்க¤றாராம்... இந்த படம் தொடங்கி 2 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சாம். ஏன் இவ்ளோ டிலேன்னு கேட்டா, 'படத்துல நடிக்க¤ற பேபி நடிகைகதான் காரணம்னு சொல்றாங்களாம். அவருக்கு என்னாச்சின்னு கேட்டா, 'ஒண்ணுமில்ல அவரோட சிறுமி பருவத்துல யிருந்து கூடுதலா 3 வருஷம் வளர்ற வரை கதை போகுது. அதுக்காக வேற சிறுமிகளை நடிக்க வெக்காம அந்த பேபி குழந்தை வளர்ற வரை காத்திருந்து ஷூட்டிங்
நடத்தியிருக்கோம்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
தீபாவளிக்கு நிறைய ஹீரோயினுங்க பேமலியோட பட்டாசு கொளுத்த¤னாங்களாம்.. கொளுத்த¤னாங்களாம்... ஆனா அமல ஹீரோயினும், பிரியமான ஆனந்த ஹீரோயினும் பட்டாச கையிலயே தொடலையாம். ரெண்டு பேருமே விலங்குகள காப்பாத்துற சங்கத்துல மெம்பராம். பட்டாசு கொளுத்துனா அதுங்க பயப்படும்னு பட்டாசே கொளுத்தாம சத்தமே இல்லாத மத்தாப்பு மட்டும் கொளுத்தனாங்களாம். தன்னோட தோழிகளுக்கும் இதையே அட்வைஸா சொல்லி பட்டாசு கொளுத்துரத தவிர்க்க சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்...
புத்தக பட சாங் ரிலீஸ் பங்ஷன்ல பேசன புதுபாத ஹீரோ தமாஷா பேசறமாதிரி வேல்டு ஹீரோவையும், ஐ காட் ஹீரோவையும் நக்கலடிச்சாராம்... நக்கலடிச்சாராம்... 'இன்டஸ்ட்ரில கிஸ் கலாச்சாரத்த பரப்புனதே இவங்கதான்னு சொன்னதோட, ஐ காட் ஹீரோ, ஜோடியா நடிக்கற ஹீரோயின்கள பிக்கப் பண்றதுலய குறியா இருக்காருனு சொன்னாராம். பங்ஷன்ல இருந்த ஐ காட் ஹீரோ இத கேட்டு ஷாக் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... ஸ்டேஜுக்கு வந்தவர், 'எந்த ஹீரோயினயும் நான் பிக்கப் பண்ணலனு புதுபாத ஹீரோக்கு சூடா பதில் சொன்னாராம்... சொன்னாராம்...
Post a Comment