ரத்தத்துல ஏன் எழுதினார்.. பேனா மை தீர்ந்திடுச்சா? - வைரமுத்துவை நக்கலடித்த பாலா!

|

Bala S Experience With Vairamuthu

சென்னை: பரதேசி படத்தின் பாடல்களை தன் ரத்தத்தில் எழுதியதாக வைரமுத்து கூற, அதற்கு ஏன்... பேனாவில் மை தீர்ந்துடுச்சா என்று மனதுக்குள் கிண்டலடித்தாராம் இயக்குநர் பாலா.

இதனை அவரே படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்தார்.

பரதேசி படத்தின் இசைவெளியீட்டுக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முதல் முறையாக வைரமுத்துவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பாலா, "படத்தின் பாடல்களை எழுதி முடித்த பிறகு, அந்த தாள்களை என்னிடம் நீட்டினார் வைரமுத்து. நான் வாங்கி வைத்துக் கொண்டேன். அப்போது அவர், இந்த பாடல் வரிகளை நான் ரத்தத்தால் எழுதி இருக்கிறேன்.. படித்துப் பாருங்கள் என்றால் உணர்ச்சிகரமாக.

உடனே நான் நினைத்துக் கொண்டேன்... ஏன் ரத்தத்துல எழுதணும்... மை தீர்ந்துடுச்சா என்று.

நான் கொஞ்சமல்ல, ரொம்பவே கிண்டல் பிடிச்ச பேர்வழி. அதனால் இயல்பாகவே என் மனதுக்குள் அப்படி தோணுச்சு. ஆனா அப்புறம் படிச்சிப் பார்த்தேன். ரத்தத்துலதான் எழுதியிருந்தார்," என்றார்.

 

Post a Comment